மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பொன் முத்து நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் முட்புதர்கள் அடர்ந்து மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் பூச்சிகள் திரிவதை தடுக்கும் விதமாக அந்த இடங்களை சுத்தம் செய்யும் பணியையும், கணபதி நகர் நாகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த இடங்களை சுத்தம் செய்யும் பணியையும், பிலோமினாள்புரத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கல்வெட்டு பாலம் கட்டும் பணியையும், மலையப்ப நகரில் உள்ள அனைத்து சாக்கடையையும் ஸ்பெஷல் டீம் மூலம் முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்த பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணிக்கு கான்கிரீட் போட்ட பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.