ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் தொடக்கம்; 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது 

0 303
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்  தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

2ம் திருநாளான 7-ந்தேதி முதல் 6ம் திருநாளான 11-ந் தேதி வரை மற்றும் 8ம் திருநாளான 13-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 12–ந் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான 14-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணைஆணையர்(பொறுப்பு) கல்யாணி, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.