திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

0 375
Stalin trichy visit

திருச்சி விமானநிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 5.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சையை சேர்ந்த சுபாஷ் என்ற பயணி தனது ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்துவந்த சுமார் 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.19 லட்சம் எனவும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.