மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் நிரந்தர பணி வழங்கக்கோரி முதல்வருக்கு கோரிக்கை

0 329
Stalin trichy visit

தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிம் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர்(1990) முற்றிலும் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் மக்கள் நல பணியாளராக நியமிக்கப்பட்டோம். 1991ல் பணிநீக்கம் செய்யப்பட்டோம். மறுபடியும் 1996ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதன் பின்னர் 1997ல் 2-வது முறையாக மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டோம்.

பின்னர் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசால் மே மாதம் 2-வது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டோம். 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 3-வது முறையாக மக்கள் நலப்பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட செய்யப்பட்டோம். 2011ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 3வது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டோம். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக பணி இன்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்.

கடந்த 30 ஆண்டுகளில் 3 முறை பணிநீக்கம் செய்யப்பட்டு 4-வது முறையாக பணி நியமனத்திற்காக போராடுவது மக்கள் நல பணியாளர்கள் மட்டுமே. எனவே, அ.தி.மு.க. அரசால் பழி வாங்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் நிரந்தர பணி வழங்கி ஆணையிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.