திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(48). இவர் அதிமுக நிர்வாகியாக உள்ளார். மேலும் இவரது நண்பர் சீனிவாசன். இந்நிலையில் இருவரும் திருவெறும்பூர் அடுத்த கல்லணை அருகே உள்ள வேங்கூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு தங்களது மொபட்டில் புறப்பட்டுச் சென்றனர். மொட்டை எம்.ஆர்.கண்ணன் ஓட்ட சீனிவாசன் பின் அமர்ந்து வந்துள்ளார். மேலும் திருச்சி அடுத்த கல்லணை அருகே உள்ள வேங்கூர் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தபோது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரு ஆட்டோ வந்துள்ளது.
அந்த ஆட்டோ திடீரென முன்புறம் சென்ற மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். மேலும் இந்த விபத்தில் எம்.ஆர்.கண்ணனுக்கு தலையில் பலத்த காயமும், சீனிவாசனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அங்கு சாலையில் வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து உடனடியாக அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.