திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம்

0 465
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா முன்னிலையில் திடக் கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சியின் மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் வாங்குதல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களை தூய்மையாக பராமரித்து குப்பையில்லா நகரமாக மாற்றுதல், சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்தல், தெருக்களில் பரோபரியாக சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபிஸ் தடுப்பூசி போடுதல், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல், சாலையோர உணவகங்கள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு மேற்படி பணிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாநகர் நல அலுவலர் மரு.எம்.யாழினி,
பொன்மலைக்கோட்ட துணை ஆணையர், திரு.எம். தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள், அனைத்து கோட்டங்களின் சுகாதார அலுவலர்கள் சுகாதார ஆய்வர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.