திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர விழா

0 365
Stalin trichy visit

திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் – திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வயலூர் முருகனை தரிசனம் செய்ய ஆர்வமுடன் குவிந்திருந்த பக்தர்கள்…

பங்குனி உத்திரம் என்றாலே எல்லா ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறும் அதிலும் முருகன் ஆலயங்களில் தேர்த்திருவிழா,சிறப்பு அபிஷேகம் போன்றவை நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் கிருபானந்த வாரியரால் பாடல் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கொரோனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பால்குடம் காவடி போன்ற வேண்டுதல்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் நிறைவேற்றினர் – அதிகக் கூட்டம் கூடும் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட வரிசையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மணிக்கணக்கில் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.