மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுக்கூட்டம்

0 487
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலளர் லால்வீனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் வாயிலாக, செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட செயலாக்கத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து செயல்படுத்தி அவர்கள் பயனடைய செய்திட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அரசு சார்பு செயலாளர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அரசு மறுவாழ்வு இல்ல மருத்துவர் அக்சீலியா மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.