தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதம்

0 433
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த தேனூர் அருகே உள்ள வரதக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 81). இவர் வசித்து வந்த வீடு கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் முழுவதுமாக ஊறிப் போயிருந்த நிலையில் நேற்று வீட்டின் சுவர் அனைத்தும் இடிந்து விழுந்ததில் மேற்கூரையும் முற்றிலுமாக சேதமடைந்தது.

இதனால் முழுமையாக வீடு இடிந்து விழுந்ததால் பொருட்களும் சேதமடைந்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருங்காபுரி வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.