தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் விற்பனை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

0 667
Stalin trichy visit

திருச்சி,மே 24. டான்சம் நிறுவனத்தின் தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர் அலுவலர்களுடன் வலிமை சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம், திருச்சி டான்சம் மேலாண்மை இயக்குநர் காமராஜ், தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சிமெண்ட் நிறுவனத்தின் வலிமை சிமெண்ட் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ஒரு லட்சம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை நடைபெற்றுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் அய்ம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்து, விற்பனை செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று டான்சம் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார். இக் கூட்டத்தில் அனைத்து உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட விற்பனை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.