குதிரையில் தலைக்கவசம் அணிந்து சென்று விழிப்புணர்வு

0 216
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 100 இலவச தலைக்கவசம் வழங்கும் விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் சாலை மேம்பாலம் அருகில் நடைபெற்ற விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுனர் சவரிராஜ் தப்பாட்ட கலைஞர்களுக்கு டி-சர்ட் வழங்கிய தோடு இருசக்கர வாகன ஓட்டிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக தலைக்கவசமும் வழங்கினார்.

பின்னர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகன பேரணி துவங்கியது. பேரணிக்கு முன்னதாக குதிரையில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சென்று வித்தியாசமான முறையில் நடைபெற்ற பேரணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பேரணியானது திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம், புதுத்தெரு, திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை வழியாகச் சென்று லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.