கரூர் எம்.பி ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்

0 206
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கரூர் எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம்.

கரூர் லோக்சபா தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்பியாக ஜோதிமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக., திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னம்பட்டி பேரூராட்சி துலுக்கம்பட்டி பகுதியில் நன்றி அறிவிப்பை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நம்பி வாக்களித்த உங்களுக்கு நன்றியோடு இருக்கவேண்டும் என்பதற்காக நன்றி தெரிவிக்க வந்துள்ளோம். நன்றி தெரிவிப்பது என்பது நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்துதான் அவர் எம்பி. ஆறு சட்டமன்ற தொகுதி மக்களும் பல்வேறு கோரிக்கை வைப்பார்கள். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது. என்பதை ஆராய்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து முடிப்பார்கள். இருப்பினும் இப்பகுதி மக்கள் விடுத்துள்ள சமுதாயக் கூடம் வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றித்தரப்படும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் மணப்பாறை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டது. உங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என அமைச்சர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளான ஆத்துப்பட்டி, சந்தப்பேட்டை, முஸ்லிம் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, சடவேலாம்பட்டி, பொன்னம்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார். எம்பி., ஜோதிமணியிடம் பொதுமக்கள் 100 நாள் வேலை, சாலை வசதி, சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்தனர். அப்போது மக்களிடம் ஜோதிமணி உடனடி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
எம்பியுடன்‌ மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், துவரங்குறிச்சி நகர செயலாளர் நாகராஜன், பேரூராட்சி தலைவர் சரண்யா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.