ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தும்

0 26
National

திருச்சி மாநகரில் காவல்துறை சார்பில் மாநகர ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் (MOB OPERATION) ஒத்திகை பயிற்சி

திருச்சி மாநகரில் வரும் காலங்களில் மதம் சார்ந்த விழாக்கள், அரசியல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு முன்னெச்சரிக்கையாக கலவர தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கலவரம் அல்லது சட்டவிரோத கூட்டத்தை அடக்க / கலைக்க ஆயுதப்படை காவலர்களுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்க திருச்சி மாநகர காவல் ஆணையராக G.கார்த்திகேயன்,  உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 200 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்டு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

Click the image to Chat on Whatsapp

இந்த சிறப்பு கலவர ஒத்திகை பயிற்சியில் காவலர்களை ஒரு பகுதியினரை கலவரக்காரர்கள் சித்திரித்து, அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக செய்து, செயற்கையாக கலவரத்தை உண்டாக்கி, கலவரக்காலங்களில் பயன்படுத்தப்படும் காவல்துறை வருண் (தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம்) வாகனத்தை கொண்டு, கலவரக்காரர்களுக்கு உயிர்சேதாரம் ஏற்படாமல், தண்ணீரை கலவரக்காரர்கள் மீது பீச்சியடித்தும், வஜ்ரா (கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனம்) வாகனத்தை கொண்டு, கலவரக்காரர்களுக்கு உயிர்சேதாரம் ஏற்படாமல், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், காயங்கள் ஏற்படாமல் லத்தி மற்றும் துப்பாக்கியை கொண்டும் கலவரக்கூட்டத்தை கலைத்து, கட்டுப்படுத்தும், ஒத்திகை பயிற்சி தத்துரூபமாக காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கள் ஏதுமின்றி அமைதியை உறுதி செய்ய காவலர்களை கொண்டு இதுபோன்று சிறப்பு பயிற்சிகள் மற்றும் காவல் கொடியணிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!