கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் பணி

0 87
National

திருச்சி மாநகரை புறநகர் பகுதியுடன் இணைக்கும் வகையில் திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928-ம் ஆண்டு இரும்பு பாலம் கட்டப்பட்டது. திருச்சி-சென்னை வழித்தடத்தின் பிரதான போக்வகுரத்து நடந்து வந்த இப்பாலம் தொடர் மண் அரிப்பு காரணமாக வலுவிழந்தது. இதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.வாக இருந்த போது திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பால வடிவில் ரூ.88 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு2016-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி திறக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான பாலம், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் கொள்ளிடத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சேதமடைந்தது. பாலத்தின் 18 மற்றும் 19 வது தூண்கள் இடிந்து ஆற்றில் விழுந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஏற்கனவே உடைந்த பழைய பா லத்தின் 17வது தூண் சரிந்து விழுந்து நீரில் மூழ்கியது. 20வது தூணும் வெள்ள நீரில் படிப்படியாக மூழ்க தொடங்கியுள்ளது. இதனால் பழைய பாலத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த, ரூ. 3.10 கோடி நிதி ஒதுக்கி டெண்டர்விடப்பட்டு கடந்த ஜூன் 16-ம் தேதி அதற்கான பூஜை நடந்தது. 6 மாதத்திற்குள் இப்பணி நிறைவடையும் என்று கூறப்பட்டது. ஆனால் பழைய பாலத்தன் தூண்கள் தொடர்ந்து இடிந்து விழுவதால், புதிய பாலத்தின் அடியில், 40 அடி ஆழத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் விழ இருக்கும் 20வது தூண் புதிய பாலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. ஆனால் கொள்ளிடத்தில் தண்ணீர் வரத்து நின்றவுடன் பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என்று கலெக்டர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். இப்பணியோடு புதிய பாலத்தை பலப்படுத்த முதல் கட்டமாக ரூ.6.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள 17வது முதல் 21 வது தூண்களின் முன்னும் சில மீட்டர் தூரத்திற்கு சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு அடித்தளத்தை பலப்படுத்தும் வகையில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!