வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து சாலை மறியல்

0 226
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த மசோதாவை கண்டித்து திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் கைது

ஒன்றிய அரசு இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும் வக்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அந்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வக்ஃபு மசோதாவைக் கண்டித்து இன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது அந்த அமைப்பின் மாநில தலைவர் யஹ்யா தலைமையில் ஊர்வலமாக வந்த மாவட்டத் தலைவர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட அந்த அமைப்பினர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.