திருச்சி பொன்மலைப்பட்டியில் கடந்த 24.04.22-ம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும், 25.04.22-ந்தேதி ஆஞ்நேயர்கோவில் அருகில், நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டி, சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாகவும் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி தாமஸ் ஸ்டாலின் (21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி தாமஸ் ஸ்டாலின் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு மற்றும் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் கேடு விளைவித்ததாக 4 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே தாமஸ் ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.