வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு!
திருச்சி கோட்டை அருகே தேவதானம் காவேரி ரோட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 48). இவரிடம் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பைக் இருந்தது. கடந்த 27ம் தேதி இரவு இந்த பைக்கை பன்னீர்செல்வம், தனது
வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் எழுந்து வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தி இருந்த பைக் மாயமாகியிருந்தது. இதுகுறித்து பன்னீர்செல்வம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.