மணப்பாறை வழக்கறிஞர் சங்கத்தில் நிருவாகிகள் இடையே சலசலப்பு

0 295
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3  மணப்பாறையில் வழக்கறிஞர் சங்கம் இரண்டாக பிரிந்து இருதரப்பினரும் மாறி – மாறி நிர்வாகிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வழக்கறிஞர் சங்கத்தில் 228 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக மோகன்தாஸ் என்பவர் உள்ளார். இந்நிலையில் அவர் சங்கத்தின் கோட்பாடுகளை மீறி தன்னிச்சையாக செயல்படுவாதாகவும், மூத்த வழக்கறிஞர்களை தரக்குறைவாக வாட்ஸ்அப் குழுவில் விமர்ச்சனம் செய்வது என தொடர்ந்து சங்கத்தின் நன்மதிப்பை கெடுத்து வருவதாகக்கூறி, துணைத்தலைவர், செயலாளர், இணைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சேர்ந்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தை நடத்தினர். அதில் தற்போது தலைவராக உள்ள மோகன்தாசை தலைவர் பதவியில் இருந்து நீக்கியும், ஆறு மாதம் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்தும் மேலும் ஏப்ரல் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் தலைவராக உள்ள மோகன்தாஸ் அவர்களுக்கு போட்டியாக தனது ஆதரவாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாகவும் அப்பதவிகளுக்கு வருகிற 3 ம்தேதி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறி தீர்மானம் நிறைவேற்றினார். வழக்கறிஞர்கள் சங்கத்தில் நிர்வாகிகளே மாறி மாறி நீக்கிக் கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.