பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு பயிற்சி

0 307
Stalin trichy visit

பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு வேளாண்மை துறை சார்பில் பயிற்சி அளித்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு வேளாண்மை துறை சார்பில் சம்பா பருவத்திற்கு விதை தேர்வு செய்வது எப்படி என்று வேளாண் அலுவலர்கள் பயிற்சி வழங்கினார்.

லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் விவசாயிகள் உழவர் குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் கலந்துகொண்டு வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். இதில் குமுளூர் வேளாண்மை கல்வி நிலைய உதவி பேராசிரியர்கள் ஹரிகரசுதன் கலந்து கொண்டு வேளாண்மையில் உயிர் உரங்கள் பயன்படுத்துதல் இயற்கை வேளாண்மை பற்றியும், உதவி பேராசிரியர் வினோத் சம்பா பருவத்திற்கு விதை தேர்வு குறித்தும் நவீன வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்கி கூறினார். திருச்சி மாவட்ட மத்திய திட்டங்கள் துணை இயக்குனர் சாந்தி கலந்து கொண்டு வேளாண்மை துறை திட்டங்கள் பற்றியும் உழவர் பயிற்சி நிலையம் பற்றியும் ,வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி உழவன் செயலியை பயன்படுத்துதல் கிராம முன்னேற்ற குழு அமைப்பதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார். இதேபோல் உதவி வேளாண்மை அலுவலர்கள் எடிசன், சந்திரசேகர் ஆகியோர் வேளாண்மை துறை மானிய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருள்கள்,நெல் ரகங்கள், உயிர் உரங்கள், பயிர் பூஸ்டர்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் செய்திருந்தார். இந்த குழு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.