சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி வாகன வரி வசூல் ஏலம் 7 வது முறையாக ஒத்தி வைப்பு

0 233
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம்
சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் வாகன வரி வசூல் செய்யும் ஏலம் 7 வது முறையாக ரத்து செய்யப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த ஏலம் ரூ. ஒரு கோடியே 71 லட்சத்திற்கு விடப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜீன் 16 ம் தேதி வரை 7 முறை டெண்டர் வைத்து ஏலம் நடத்தியும் வாகன வரி வசூல் ஏலம் குறைவான தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதால் பேரூராட்சி நிர்வாகம் வாகன வரி வசூல் ஏலத்தினை தேதி குறிப்பிடாமல் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் ஒத்தி வைத்தார்.

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி வாகன வரி வசூல் பேரூராட்சி கூட்டரங்கில் செயல் அலுவலர் சந்திரா குமார் ,
பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் செந்தில்குமார், ரங்கராஜ் ஆகியோர் இருவர் மட்டுமே டெண்டர் ஒப்பந்தப்புள்ளி கூறியிருந்தனர். இதில் ரங்கராஜ் என்பவர் ரூபாய் ஒரு கோடியே 27 லட்சத்து 33 ஆயிரத்திற்கு டெண்டர் கோரி இருந்தார் .

ஆனால் பேரூராட்சி நிர்வாகம் ரூ ஒரு கோடியே 33 லட்சத்து குறைவாக ஏலம் விடப்படாது என தெரிவித்தார்.இந்த வாகன வரி வசூல் ஏலம் கடந்த 2 மாதங்களில் ஏழாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மே மாதம் 31 ம் தேதி 6 முறையாக நடைபெற்ற ஏலத்தில், டெண்டர் பெட்டியினை பூட்டி சீல் வைக்காமல் இருந்ததால் முறைகேடு நடத்துள்ளதென கூறிய ஏலதாரரை திமுக சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகர் உள்ளிட்டோர் மிரட்டினர். அதனை வீடியோ எடுத்த செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய தாக்க முயன்றதால் நேற்று நடந்த இந்த வாகன வரி வசூல் ஏலம் சமயபுரம் காவல் நிலைய எஸ்ஐ பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.