பத்திரிக்கையாளர் மீது சாடல்; வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

0 448
Stalin trichy visit

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தடுத்து நிறுத்தியதாகவும், அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆடியோ

இதுகுறித்து ஜாகிர் உசேன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை அறிந்த தனியார் பத்திரிக்கை நிருபர் ஒருவர் ஜாகிர் உசேனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரை ஜாகிர் உசேன் கடுமையாக சாடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.