காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி….

0 255
Stalin trichy visit

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சந்தோஷ்(வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றனர்.
அங்கு சந்தோஷ் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சத்தம் போட்டனர்.மேலும் அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். இதில் ஆற்றில் இருந்து சந்தோசை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து அவரது உடலை ஜீயபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.