முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…

0 242
Stalin trichy visit

முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பேசிய போது:
தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர் அவர்கள் ,
ஒன்றிய அரசாங்கம் நாம் தாய் தமிழ் மொழி மீது கை வைத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் எடுத்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். பழமையான மொழிகளில் தமிழ் மொழி தான் முதல் இடம் அதை தொட்டு பார்க்க வேண்டும் என நினைக்கின்றனர். தற்போது தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார் எனவே தமிழ் மொழியை தொட்டு பார்க்க வேண்டும் என நினைத்து கூட பார்க்க வேண்டாம்” என பேசினார்.

இதில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், 3-வது மண்டலத்தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.