தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 303
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் அமைந்துள்ள மௌலானா ஜமாலி மெட்ரிகுலேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து இலவச மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
3 மணிநேரம் தொடர் ஓவியம் வரைந்து ஓர் உலக சாதனை , இரண்டாவது 92000காகித கோப்பைகளால் இந்திய தேசிய கொடியை வண்ணம் தீட்டி வடிவமைத்தனர் ஆகிய இரண்டு முறை உலக சாதனை படைத்த இனாம் குளத்தூர் மௌலானா ஜமாலி மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களின் மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனத்தலைவர் இ.சாகுல் ஹமீது ஜமாலி தலைமை வகித்தார்.

பள்ளியின் செயலாளர் R.கான்முகமது,துணைத்தலைவர் R.அப்துல்லா,தாளாளர் S.பலுலுர் ரஹ்மான்
அப்பிஸ்தீன் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.