குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கீரம்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென பெரம்பலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஊராட்சி நிர்வாகம்
குடிநீர் முறையாக வழங்காமல் 10 நாட்களுக்கு ஒரு முறை உப்பு நீர் வழங்குவதாகவும் அதனை அருந்தும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வயிற்று வலி ஏற்படுவதாகவும் அதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும் பொழுது சிறுநீரில் கற்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் நிர்வாக திட்டம் கூறி முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்துவதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்