செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

0 469
Stalin trichy visit

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள 2 பல கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்தபோது 4500 கிலோ செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக அந்த பழங்களை பறிமுதல் செய்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டினர் – மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு என்ன மாதிரியான ரசாயனத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதனை கண்டறிய மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இனி மாம்பழ சீசன் என்பதால் திருச்சியில் வேறு எங்கும் மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.