மாணவர் விடுதிக்கான இடம் தேர்வு : அமைச்சர் ஆய்வு
திருச்சி, செப்.30 திருச்சி பஞ்சப்பூரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக்கான தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆதிராவிடர் நலத்துறை அலுவலர் மிருணாளினி, தாட்கோ செயற்பொறியாளர் காதர்பாட்ஷா, பழங்குடியினர் நல அலுவலர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.