மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 260
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், குறிஞ்சி நகர் மக்கள் மன்றம் கூட்டத்தில் கலந்து கொண்டு “என் குப்பை! என் பொறுப்பு!!”என்பதன் தன்மை குறித்து மாநகராட்சி வழிமுறைகளை எடுத்துரைத்தார். பிலோமினாள் புரம் முதல் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியையும் காந்தி சாலையில் ரோடு போடும் முன்பு பாதாள சாக்கடை ஒரு சில வீடுகளில் லைன் கொடுக்காமல் இருந்ததை சரி செய்யும் பர்மா காலனியில் சாக்கடை கட்டும் பணியையும், ,கமலா நேரு நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைப்பு பகுதியையும்,  , பொன் முத்து நகரில் தனிநபர் இடங்களில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  னித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் மாணவர் பார்லிமென்ட் அமைத்தல் விழாவும் நடைபெற்றது, இவ்விழாவில் தனது மனைவி திருமதி S.சத்யா, பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்களும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.