கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ உள்பட 3 காவலர்கள் கைது!

0 248
Stalin trichy visit

திருச்சி, ஜீயபுரம் முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர் புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதுமட்டுமன்றி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் இந்த சுற்றுலா தலத்திற்கு வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி பயிலும் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார்.
அப்போது ஜீயபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவியாளர் சசிகுமார் மற்றும் அவருடன் பணியாற்றும் சக காவலர்கள் மூன்று பேர் அங்கு மது அருந்தியதாக கூறப்படுகிறது அதனை கண்ட அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி அந்த ஆண் நண்பர் மற்றும் பெண் இருவரையும் சோதனை என்ற பெயரில் காருக்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவசர உதவி எண்ணிற்கு புகார் அளித்ததை தொடர்ந்து எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் அந்த காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.