காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 200 மாட்டு வண்டிகளில் சென்று ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்

0 315
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி  கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள் சுமார் 200  இரட்டை மாட்டு வண்டியில் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர்

காவல்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 1200 பக்தர்கள் 200 மாட்டு வண்டிகளில் இன்று வருகை தந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர் – முதலாவதாக வட காவேரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் அவர்கள் மொட்டை அடித்து தளுகை பூஜை செய்துவிட்டு பின்னர் அனைவரும் ஒன்றாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமியை தரிசனம் மேற்கொண்டனர்

நான்கு சக்கர வாகனங்கள் பெருத்து விட்ட இந்த காலத்தில் இன்றளவிலும் பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் வந்து நம் பெருமாளை தரிசனம் செய்யக் கூடிய இந்த நிகழ்வு கலாச்சாரத்திற்கும் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட  இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும்  ,இன்றையை தலைமுறை குழந்தைகளும் காணலாம் ,

Leave A Reply

Your email address will not be published.