துறையூர் வனத்துறை அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் வனத்துறை அலுவலகம் முன்பாக தளுகை விவசாயிகள் சங்கத்தினர் சந்தன கட்டைகளை பதுக்கிய போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர் அருகே உள்ள தளுகை வனப்பகுதியில் பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற போலி சாமியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அவரது ஆசிரமத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். அப்போது அங்குள்ள பொருட்களை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் வீட்டில் மறைத்து வைத்தனர். அதில் சந்தன கட்டைகள் இருந்ததாக கூறி அவ்விவசாயியும் ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகி மணிகண்டன் இருவரையும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து இருந்தனர்.
இந்நிலையில் தளுகை சேர்ந்த விவசாய சங்கத்தினர் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்த போலிச்சாமியார் கார்த்திகேயன் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்தன மரங்கள் கடத்தியவர்களை ஆதரித்து தப்பிக்க விட்ட துறையூர் வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்தனமரம் பதுக்கிய கும்பல் மீது சிபிசிஐடி விசாரணை உத்தரவிடக் கோரியும் துறையூர் வனத்துறை அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறை வனத்துறை வருவாய் துறை அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி சம்பந்தப்பட்ட போலிச் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் தலுகை விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.