தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது

0 338
Stalin trichy visit

கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தா.பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வார சந்தை மேம்பாடு ரூ 1.92 கோடி மதிப்பீட்டிலும், பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்காக ரூ1.51 கோடி மதிப்பிலும் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் கேகேஆர்.சேகரன், திருஞானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், நிர்வாகிகள் மயில்வாகனன், பெரியசாமி, பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரி ரூ 24 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளையும், எம்.களத்தூர் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ 18 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ,துறைசார்ந்த அலுவலர்களும், கட்சி நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.