சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் சிலைக்கு பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 2 நீதிக்கட்சியின் வைரத்தூண் சர். ஏடி பன்னீர்செல்வம் பிறந்தநாளையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
நீதிக்கட்சியின் வைரத்தூண் என போற்றப்படுபவரும், இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலையில், ‘பாரிஸ்டர்’ பட்டம்பெற்றவரும், நீதிகட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணி தலைவராக விளங்கியவரும், தாழ்த்தப்பட்டோர் நலனில் முழு அக்கறை கொண்டவரும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுதந்த சர். ஏடி பன்னீர்செல்வம் பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள, சர். ஏடி பன்னீர்செல்வம் திருவுருவ சிலைக்கு பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டாக்டர்.கதிர் கணேசன் தலைமையில், திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் திமுக மந்திரி சபையில் பார்க்க உள்ள சமுதாயத்திற்கு எந்த ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்படாத நிலையில், பார்க்கவ குல சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒருவரையாவது அமைச்சராக நியமிக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டனர், பார்க்கவ குல சமுதாயத்தை பல உட்பிரிவுகளாக பிரித்து மைனாரிட்டி சமுதாயமாக மாற்றப்பட்டு இருப்பதை தவிர்த்து பார்க்கவகுலம் என்ற பெயரில் அழைத்திடவேண்டும், மேலும் 10 எம்எல்ஏ, இரண்டு அமைச்சர், 2 நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் நிலைப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.