சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் சிலைக்கு அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 2 அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ. டி.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் நேற்று (ஜூன்1) மரியாதை செலுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின்
தலைவர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் செயலாளர் வைத்தீஸ்வரன் பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி கலைச்செல்வி ரூஷோ பேரவை.கஸ்பர்,லாரன்ஸ், பார்கவன் ஃபேராம் சதிஸ்,சந்திரசேகர்,செல்வமணி,சச்சிதானந்தம்,மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ராஜா.ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.