கிணற்றில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

0 427
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவரது மகள்கள் வித்யா (21),  காயத்திரி ( 20). இருவரும் காங்கேயத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று  அயன்புதுப்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டைவிட்டு சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அதே பகுதியில் உள்ள பெரிய வேட்டை என்பவரது கிணற்றில் காயத்திரி என்பவர் தண்ணீரில் மிதந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயத்திரி யின் உடலை மீட்டனர். தொடர்ந்து தண்ணீருக்குள் தேடி வித்யாவின் உடலையும் மீட்டனர். வளநாடு போலீசார் இருவரும் குளிக்கப் சென்று தவறி விழுந்தனரா, அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.