திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஏப். 6 திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று மாலை திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பெண் பயணி ஒருவர், வெளியில் செல்ல முயன்றார். அவரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் உள்ளாடைகளில், பசை வடிவில் 1.42 கிலோ தங்கத்தை 3 பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. ரூ.99.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையுனர், அப்பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.