திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). ராணுவ வீரரான இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தனது மனைவியின் பிரசவத்திற்காக விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டினை ஒரு தனியார் வங்கியின் மூலம் கடன் வாங்கி கட்டி உள்ளனர். மேலும் அந்த கடனை அடைக்க முடியாத நிலையில் மேல்மாடி கட்டுவதற்காக ஒரு தனியார் வங்கியின் மூலம் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.