திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள தெற்கு சாலப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி 45 வயதான தனலட்சுமி. இவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனலட்சுமி கழுத்தில் இருந்த 5½ பவுன் செயினை பதித்துள்ளனர்.
இதில் அவர் சுதாரித்து எழுந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.