“விரைவில்” பழிக்குப் பழி போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு…

0 903
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு. இவர்‌ பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் நேற்று ஓட ஓட வெட்டி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்மலை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.அதில் மரணமடைந்த சின்ராசு அவர்களின் இறுதி ஊர்வலம் 4 மணி அளவில் இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போஸ்டரில் இறுதியில் ” விரைவில் ” என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது.இந்த வார்த்தையானது “பழிக்கு பழி” என்ற கோணத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.