பொன்மலையில் பாராட்டு விழா!

0 391
Stalin trichy visit

நாமக்கல் மாவட்டத்தில் 2வது பிரதேச நிலை (Divisional leval) உடற்தகுதி விளையாட்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2022 போட்டி நடைபெற்றது. இதில் சேலம், கரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டத்திலிருந்து சுமார் 225 பேருக்கு மேல் கலந்துக் கொண்டார்கள். இதில் திருச்சி பொன்மலைசாமி தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 18 தங்கம், 4 சில்லர், 3 வெண்கலம் பெற்று வந்தவருக்கு, பொன்மலையில்

பாராட்டு விழா நடந்தது. இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில், தண்ணீர் அமைப்பு நிர்வாகி ஆர்.கே.ராஜா, சாமி தற்காப்பு கலைக்கூடம் ஆசிரியர் துரை.ஜீவானந்தம் முன்னிலை நடந்தது. சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று, பதக்கம் வாங்கியவருக்கு திருச்சி மாநகராட்சி 46வது மாமன்ற

உறுப்பினர் கோ.ரமேஷ் பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் ஜீ.சஹானா ஸ்ரீ, ஆர்.ஹேமா ஸ்ரீ, ஹர்சா வர்த்தினி, தீபிகா, ஜே.சக்தி ஸ்ரீ, கே.வி.பிரபஞ்சன், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் ஈஸ்வரன், சீனிவாசன், பாலு மற்றும் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.