மணப்பாறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; ஒருவரைஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்!

0 320
Stalin trichy visit

தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பாத்திமா மலை ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து தங்களின்

மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்ட அவர்கள் பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக இந்தியா உலக அளவில் சிறப்பிடம் பிடிக்கவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த ரம்ஜான் சிறப்பு தொழுகை இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.