பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்

0 318
Stalin trichy visit

திருச்சி, பிப்.10 திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் யுரேகா பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மணக்கால் தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரியூர் எசனைக்கோரை திருமங்கலம் எஸ்வி புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த யுரேகா மாலை நேர வகுப்பில் படிக்கும் 3ஆம் வகுப்பு முதல் 10 வகுப்புகள் பயிலும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தற்காப்பு போட்டிகளை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனி பயிற்றுனர் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மணக்கால் தொன்போஸ்கோ கல்வி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில் 47 பெண் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜூட் முத்துச்செல்வம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை எட்வின் ஆரோக்கியதாஸ் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு வினோத் அவர்கள் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக சிவகங்கை மாவட்ட யுரேகா பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு பயிற்சியாளர் நிவேதிதா  கலந்துகொண்டு மனைவிகளுக்கு போட்டிகளில் நடத்தினார்கள்.

பரிசளிப்பு நிகழ்வில் AID INDIA மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ.ராஜபாண்டியன், திருச்சி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ் டி ஜி இளஞ்சேட்சென்னி, எசனைக்கோரை பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன், சிறு மருதூர் ஊராட்சி செயலர் திரு ராஜ்குமார், தொன் போஸ்கோ பள்ளி தாளாளரும் தலைமை ஆசிரியரும் மற்றும் AID INDIA மாநிலத் திட்ட மேற்பார்வையாளர்கள் அருண்குமார் மற்றும் அற்புத கிளாடியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை திட்ட மேலாளர் நதியா மற்றும் திருச்சி மாவட்ட யுரேகா பெண்கள் விளையாட்டு குழு பயிற்சியாளர் செல்வி கரோலின் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக ஜூடி மற்றும் பிரதிபா வரவேற்புரை வழங்கினர், திட்ட மேலாளர் நதியா நன்றி உரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.