ஸ்ரீரங்கம் வாகன கட்டண வசூலில் கார்களுக்கு விலக்கு மாநகராட்சி அறிவிப்பு

0 264
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள், தனியார் பேருந்துகள், கார்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதற்கான மூன்றாண்டு குத்தகை ஏலம் வரும் 22ஆம் தேதி நடைபெறுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதேபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவுக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் கார்கள் நீங்கலாக சுற்றுலா பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க ஏலம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.