மணப்பாறை அருகே பகுதிநேர ரேஷன் கடையை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கேட்டு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக புதிய பகுதி நேர ரேஷன் கடை இன்று திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ரிப்பன் வெட்டி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் கடையில் பொருட்கள் விற்பணையையும் துவக்கி வைத்தார். தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் தங்கள் பகுதியில் குடிநீர்; பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக புதிதாக காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர பைப்லைன் பதிக்கப்பட்டு வருவதால் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன் குடிநீர்; பிரச்சினை முற்றிலுமாக தீர்ந்து விடும். என்றார்.

அதேபோல் 100 நாள் வேலை முழுவதுமாக கொடுப்பதில்லை குறைந்த நாள்களே வேலை வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்த நிலையில் உடனடியாக மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் 100 நாள் வேலையை முழுவதுமாக வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழாவில் மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி பாண்டியன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சங்க அதிகாரிகள் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.