திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டியில் செயின்ட் ஜோசப் கல்லூரி முதலிடம்

0 266
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் (12/12/2021 மற்றும் 13/12/2021) இரண்டு நாட்கள் நடைபெற்றது

 

திருச்சி, செயின்ட் ஜோசப், ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தேசிய ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.

 

லீக் போட்டிகளில் திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி, தேசிய கல்லூரியை 87-19 என்ற புள்ளிகள் கணக்கிலும், திருச்சி, ஜமால் முகமது கல்லூரியை 63-43 என்ற புள்ளிகள் கணக்கிலும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை 80-48 என்ற புள்ளிகள் கணக்கிலும், மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.

 

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி,/ஜமால் முகமது கல்லூரியை 70-38 என்ற புள்ளிகள் கணக்கிலும், திருச்சி தேசிய கல்லூரியை 61-26 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது.

 

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, தேசிய கல்லூரியை 74-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

 

கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் அருட்தந்தை எஸ். பீட்டர், முதல்வர் அருட்தந்தை எம் ஆரோக்கியசாமி சேவியர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம். பெர்க்மென்ஸ், உடற்கல்வி இயக்குனர் ஏ. பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குனர் எஸ். ரெனில்டன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.