முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 387
Stalin trichy visit

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை..

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

இதனைத்தொடர்ந்து எழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.