மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்….

0 315
Stalin trichy visit

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான தடகளம், கபடி, கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்சி காஜா நகரில் அமைந்துள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும், கபடி போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடமும், தடகள போட்டியில் மாணவி சி.தாரணி 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மாணவர் சி.கோகுல் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், ஆர்.தணுஸ்ரீ 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பள்ளி தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல், பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், சங்க உறுப்பினர்கள் ஜனாப் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குனர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.