கஞ்சா விற்பனை செய்தவர் கைது…
திருச்சி இ.பி. சாலை அந்தோணியார் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சஞ்சய் என்கிற சச்சின் (வயது22), கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 1200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.