இரும்பு நடைபாதை பாலம் கட்டுமான பணி
திருச்சி, மே29 திருச்சி மாநகராட்சி மண்டல 5, வார்டு எண் 8க்குட்பட்ட காராயி அம்மன் கோவில் அருகில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இரும்பு நடைபாதை பாலம் கட்டுமான பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்கமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.