மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

0 219
Stalin trichy visit

திருச்சி, நவ.30 ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் உயா கல்வி பயிலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோ, மிகப்பிற்படுத்தப்பட்டோ மற்றும் சீமரபினா இன மாணவ-மாணவிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.எம்., என்.அய்.டி. மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2022-23- ஆம் கல்வியாண்டில் புதிததாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ-மாணவிகள் சென்னை பிற்படுத்தப்பட்டோ நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோ மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தையோ அணுகலாம். இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் மாணவாகள் சமாப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையா, பிற்படுத்தப்பட்டோ நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரிக்கு வருகிற ஜனவரி மாதம் 31- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.